எம் மகனுக்கு,
ஆதன் எல்லோன் – Aadhan Ellon
என்ற பெயரை சூட்டியிருக்கிறோம் என்பதை பெருமகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்!
ஆதன் – உயிர்
எல்லோன் – சூரியன்
அவ்வியமில்லா அன்புத் தோழமையும்
ஆகரன் கூட்டு சேராமலும்
யாவருக்கும் தன் ஒளியால் உணவளித்து உயிராய்
புல்லானாலும், பூச்சியானாலும், அரச புதல்வனே ஆனாலும் யாவரையும் ஒன்றாய் பார்க்கும் இன்றியமையாத சூரியனாய்
என்றும் வாழிய வாழியவே!
***********************************************************************************************
#சங்க_இலக்கியத்தில்_ஆதன்
அண்மையில் கீழடி அகழ்வாய்வின் பானையோடுகளில் எழுதிய பெயர்களில் ஆதன் என்பதும் ஒன்று. இப்பெயர் தமிழவை நூல்களில் பலவிடங்களிலுண்டு.
பெரும்பாலும் சேரமரபினரின் பெயர்களே ஆதன் என்றுள்ளன.
ஆனால், பாண்டி நாட்டில் கிடைத்த தொல்சான்றில் சேரப்பெயரான ஆதனெனும் பெயர் நம்முள் பலவினாக்களைத் தொடுக்கிறது.
நம்முடைய சங்கநூல்களும் இப்போது கிடைக்கும் தொல்சான்றுகளும் நூறு விழுக்காடு ஒத்தே காணப்படுகின்றன.
#ஆதன்_பெயர்க்காரணம்
மூச்சுக்காற்றில் உள்ளிழுக்கும் காற்று, வெளிவிடும் காற்று என்று இரண்டு வகையுண்டு. உள்ளிழுக்கும் காற்றிலுள்ள உயிர்வளி உடலில் ஊறிய சத்தை எரிக்க உதவுகிறது.
உதவும் காற்று நமக்கு ஆகும் காற்று. ஆகும் காற்று ஆதல் காற்று. ஆதல் காற்றை ஆதன் என்பது தமிழ். ஆதன் என்பது உயிர்வளி. உயிர் என்றும் பொருளாகும்.
வெளிவிடும் காற்று அவிந்த காற்று. எரிந்தது அவிந்தால் கரி. அதனால் வெளிவிடும் காற்றைக் கரி+அமில வாயு என்பர். தமிழ் அவிந்த காற்றை அவினி என்று குறிப்பிடுகிறது.
ஆதன், அவினி என்னும் பெயர்கள் இவ்வாறு தோன்றின. இவற்றை மக்களும் தமக்குப் பெயராக்கிக்கொண்டனர்.
#ஆதன்_பெயர்கள்
- சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
- சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்
- சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்
- பெருஞ்சேரலாதன்
- ஆதன் அழிசி – ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியனின் 5 நண்பர்களுள் ஒருவன்
- ஆதன் – ஓரியின் தந்தை
- நெடுவேள் ஆதன் – போந்தைப்பட்டினம் என்னும் குறுநில மன்னன்
- நல்லியாதன் – ஓய்மான் நல்லியக்கோடன்
- ஓய்மான்வில்லியாதன் – இலங்கையரசன்
- ஆதனுங்கன் – வேங்கடநாட்டு அரசன்
- ஆதன் – வாட்டாற்று எழினியின் மகன்
- ஆடுகோட்பாட்டுச்சேரலாதன்
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
- முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்
- ஆதனூர் – “மேற்காநாட்டு ஆதனூர்” – திருத்தொண்டர் மாக்கதை.
***********************************************************************************************
நன்றி!
வணக்கம்!