அங்க அந்த பெரிய வீடு இருக்குல்ல??

மணியோட சித்தப்பா, முத்தண்ணே வந்தாரு மா.. என் உசரத்துக்கு அட்டப்பெட்டி..
அது உள்ள எல்லாமே வெடி.. வழக்கம் போல அவங்க வீட்டுல கொலு வெக்கிற மாதிரி வெடி எல்லாம் அடுக்கி வெச்சோம் நானும் மணியும்.

முத்தண்ணே தான் எங்க ஏரியாலையே கெத்து.

மணி தான் கதிரோட உயிர் நண்பன்..,
அவங்க வீடு தான் அவங்க ஏரியாலையே பெரிய வீடு, 4மாடி இருக்கும்.. பெரிய கூட்டுக்குடும்பம்.., மணி முதல் மாடில இருப்பான்.. அவங்க வீட்டுல 2 நாய் இருக்கும். ஒரு நாய்க்கு வாலே இருக்காது.. அதுதான் போலீஸ் நாய் ன்னு சொல்லுவோம். இன்னொரு நாய் பப்பி..,

கதிருக்கு மட்டும் இல்ல, அந்த ஏரியால இருக்க எல்லாருக்குமே இவங்க வீட்டு நாய் மேல அவ்ளோ பயம். இவங்க வீட்டுல பாட்டிய அவ்வா-னு கூப்பிடுவாங்க, அவ்வா தான் எல்லாமே..

இவங்க வீட்டுல மணியோட மத்த நண்பர்கள் யாரையுமே விடமாட்டாங்க. வெளியவே பேசி அனுப்பிடுவான்..
கதிருக்கு மட்டும் அதுல விதிவிலக்கு..,

ஏன்னா வருசா வருசம் கதிர் தான் முத்தண்ணனுக்கு வெடி இறக்குமதி பன்னி கொடுப்பான். மார்க்கெட்ல வர்ற புது வெடி எல்லாம் சிவகாசில தாத்தா கிட்ட சொல்லி வாங்கி கொடுக்குறதுனால முத்தண்ணனுக்கு இவன் மேல தனி பாசம்.

அது மட்டும் இல்ல, மணி Matriculation Schoolல 8ஆவது படிக்கிறான். நல்லா படிப்பான்,
Government Schoolல படிச்சாலும் அவனுக்கு சமமா சந்தேகம் கேட்டு விவாதம் பண்ணுற ஒரே நண்பன் கதிர் மட்டும் தான். அதுனாலேயே அவங்க வீட்டுல எல்லாருக்கும் கதிர ரொம்ப புடிக்கும்.

சனி, ஞாயிறு, அப்புறம் எப்போ எல்லாம் லீவு கெடைக்குதோ அப்போ எல்லாம், மணி வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் வீடியோ கேம் விளையாடுவாங்க..

கம்ப்யூட்டர், கோடிங், கேம்ஸ் இதுதான் மணியோட உலகம்.. அப்போவே கோடிங் எல்லாம் பண்ணி வீட்டு பால்கணக்கு, வீட்டு செலவு கணக்குக்கெல்லாம் எல்லாம் கம்ப்யூட்டர்ல பண்ணி வெச்சுறுப்பான்..

சரி நாம கதைக்கு திரும்புவோம்…,

ஏன்டா கதிர், அந்த வெடிய அடுக்கி வைக்கவா இவ்ளோ நேரம்?? ஆமா மா ஆமா..!
என்னம்மோ கதை சொல்லி ஏமாத்துற, படிக்காதவன்னு தானே இப்படி எல்லாம் ஏமாத்துறன்னு புலம்பிட்டே.. என்னம்மோ போ..

உன் வாழ்க்கை, நீ ஆசைப்படுறது உனக்கு வேணும்னா, அதுக்கு என்ன தகுதி வேணுமோ, அதை வளத்துக்க என்ன பண்ணணுமோ, அது மட்டும் பண்ணு, அதை சரியா பண்ணு..!

அவ்ளோ தான் சொல்லுவேன்னு கதிருக்கு தோசை ஊத்தி கொண்டுவர போயிட்டாங்க..!

சாப்பிட்டு முடிச்சதும், கொஞ்ச நேரத்துல மணி, கதிர தேடி வந்தான். எங்க சித்தப்பா நாளக்கி தான் வருவாரு, அதுக்குள்ள நீங்க தாத்தா வீட்டுக்கு தீபாவளி கொண்டாட போறோம்னு அக்கம் பக்கத்துல சொல்லிட்டு போய்டுங்க.

இதை நான் எப்படி டா அம்மா கிட்ட சொல்லுவேன்னு கதிர் கேக்க, சாரி டா கதிர். எப்டியாது நீயே அம்மா கிட்ட சொல்லி சமாளி.., நான் சித்தப்பா வந்ததும் அவரை சமாதான படுத்தி முயற்சி பண்றேன்னு சொல்லிட்டு கிளம்புனான் மணி.

இவங்க அப்போ பண்ண காரியத்தால வாழ்க்கையே மாறப்போகுதுன்னு அவங்களுக்கு அப்போ தெரியல..!

ஆனா ஏதோ பெருசா ஒரு பிரச்சனை வரப்போகுதுன்னு பயந்துட்டே, தூக்கம் வராம, அம்மா கிட்ட சொல்லிடலாமா ன்னு யோசிச்சுட்டே தூங்காம இருந்தான், கதிர்.

தொடரும்..!

By Ramesh Fernandez 256 Views

Leave a Reply