இன்றல்ல நேற்றல்ல,

பெருந்தொற்றுக்கு முன்னரே பெரும்பண்டிகைகளின் கொண்டாட்டத்தை என்றோ நாம் இழந்து விட்டோம்..,

90களில் இருந்த கொண்டாட்டம் இன்று இல்லை…!

எத்தனை மனம் இதை ஏற்கும் என்று நான் அறியேன்.

பண்டிகையும் பகட்டும் மட்டும் தான் மிச்சம் இருக்கிறது..!

அண்டை மக்களிடம் பண்டப்பரிமாற்றமும்,
தூர சொந்தங்களின் வாழ்த்து மடலும்,
அத்தனை சொந்தமும் கூடிக்கொண்டாடிய பாசமும் எங்கோ மறைந்தது ஏனோ..!


இப்பெரும்தொற்றிலும் இவையாவும் தொலைக்காமல், இனிப்பு பரிமாறி, சொந்தங்களுக்கு வாழ்த்துறைத்து இன்முகத்தோடு கொண்டாடும் யாவருக்கும்,

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!


அன்றிருந்த அதே பண்டிகை சூழல் ஒரு நாள் வரும்.

அன்றொருநாள்,

எம் மக்கள் மகிழ்ந்திருப்பர்..!

– இப்படிக்கு
கதிர்

By Ramesh Fernandez 336 Views

Leave a Reply