கிருக்கல்களை கோர்த்து மலர் மாலை செய்திருக்கிறேன்..!

மணம் இருக்குமா தெரியவில்லை, ஆனால் என் மனம் நிறைகிறது..!

வேறென்ன வேண்டும்..!

தமிழின்பால் கொண்ட காதலும் காரணம் என்பேன்..!

உயிரெழுத்துக்களில் ஒரு முயற்சி…!
தவறிருப்பின் தயங்காமல் திருத்தவும்😊



வள்


த்தனை திங்களையும் அவளுக்காகவே ஒதுக்கிடுவேன்,
அவள் மட்டும் ஒளி பெற்று மளர்ந்திடவே..!

ழிப் பேரலையும் அடங்கித்தான் போகிறதே
அவள் புருவம் உயர்த்தையிலே..!

சையாய் சிரிப்பாள் இவள், இதழால் இசைப்பாள் இவள்,
இசைந்தே கிடைப்பான் இவன்..!

டிகை யாவும் இவள் பெயர் எழுதிடும்,
ஈனனம் யாவும் இவள் காலடி ஏங்கிடும்..!

மையவள் உனை உடையான் உலகுடையான்,
உன் நகையுடையான் நாற்படை உடையான்..!

ற்றாய் இருப்பாள் என் தாகம் தணிக்க,
ஊரார் பார்க்கும்படி என்னை மணக்க..!

ழுபிறப்பும் எனை கொள்வாய் என்றேங்குவான்,
என் மறுபிறப்பும் மறவா வரம் வேண்டுவான்..!

ய் எனும் பொழுதே அடங்கிடுவான் – அவள்
செல்ல ஏச்சுக் கேட்டுப் பணிந்திடுவான்..!

ம்பெரும்குழுவும் அறியாத ஐயம்
அவள் ஐந்தே நொடியில் தீர்த்திடுவாள்..!

ப்பனை தேவைப்படா ஒய்யாரி அவள்
ஒளித்தே வைத்தாலும் ஒளிர்முகம் அவள்..!

ரம் போகட்டும் அத்தனை மலர்களும்
ஓரிதழ்த்தாமரையாய் ஓர இதழில் சிரிக்கிறாள் அவள்..!

தசியம் யாவும் தோற்றே போகும்,
இவள் செய்திடும் ஔடனம் முன்னே..!


நன்றி

By Ramesh Fernandez 368 Views

2 thoughts on “உயிர்க்குறள்”

Leave a Reply