இன்று நம்ம வெற்றிக்கதையின் நாயகன் அருண் ஐஸ் கிரீம், இல்ல ஆரோக்யா பால் இல்ல ibaco. எல்லாமே ஒருத்தர் தாங்க அவர் R.G Chandramogan sir! இவரை பத்தி தான் பார்க்க போறோம். சின்ன வயசுல ஐஸ் சாப்பிட பிடிக்கும்னா நாமா வாங்கி சாப்பிட ஆசை படுவோம், இவர் ஐஸ் கம்பெனி நடத்த யோசிக்கிறார்.

1970 ஆம் வருஷம் சின்னதா ஒரு குச்சி ஐஸ் கம்பெனி 13000 முதலீட்டுல துவங்குறார். முதல் பத்து வருஷம் தொழிலை சமாளிக்க முடியமா போராடறார். இவருக்கு போட்டியாளர்கள் தாஸப்ரகாஷ், ஜாய் அப்புறம் kwalityகம்பெனிகள். சொல்லவே தேவ இல்ல அன்றைய சூழலில். முட்டி மோதி நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துடுறார்.


1991 ல மூணு கோடி வருமானம் அப்படியே திரும்பி பார்த்தா 2020 21 ஆண்டு வருமானம் 4500 + கோடிகள். இவரோட பிசினஸ் formula ஒரு reverse இன்ஜினியரிங் method nu சொல்லலாம். அம்பானியோட strategium இதே தான். பின்னோக்கி போறது, மொதல்ல ஐஸ் கிரீம்ஸ், ஐஸ் கிரீமோட மூல பொருள் பால்.

1995 ல ஆரோக்யா varudhu, அதுக்கு அப்பறம் மார்க்கெட் need ஆராய்ந்து பால் , பால் சார்ந்த பொருட்கள் , தயிர், பால் பவுடர், பன்னீர், சீஸ் இப்படி நீளுது இவங்க products. பால் கெட்டு போறப் பொருள் அதுனால சப்ளை செயின் ரொம்ப நெட்ஒர்க் ரொம்ப பலமா இருக்கனும்.

பால் சப்ளை பண்றவங்கள ஒருங்கிணைத்து மொத்தமா கொள்முதல் பண்ண செய்றாங்க. இன்றைய தேதியில் கிட்ட தட்ட ஏழு லட்சம் விவசாயிகள்ட்ட 30 + லட்சம் பால் கொள்முதல் செய்றாங்க எல்லா நிலை ஊர்களில் இருந்தும் (இது தான் நலம் அன்புடன் நமது கிராமங்களில் இருந்து விளம்பரமா மாறிருக்கு ) with good infra.



இவங்களோட உயர்ரக product range தான் IBACO எனக்கு விரும்பிய சுவைகளை நானே தேர்ந்து எதுத்து சாப்பிடலாம் அதே நேரம் தேவையான அளவுல கூடுதல் flavours. இதுவும் நல்ல ரீச் சிறு பெரு நகரங்களில். தன்னோட பிசினஸ் பண்றவங்களும் வளரனும்னு HAP டெய்லி retailing வாய்ப்பும் வழங்குறாங்க (one stop shop)

Santosa மாட்டு தீவனங்கள் , தரமான மாடு மற்றும் கன்று வளர்ப்பு தீவனங்கள் தயாரிப்புல வெளிவருது. மொத்தத்தில் ஒரு பால் சார்ந்த complete cycle நிறுவனம் Hatsun .

தொடர்வோம் வெற்றியாளர்களை!!

By Ramesh Fernandez 267 Views

Leave a Reply