#EMI (Equated Monthly Installment)
EMI இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்றாகிவிட்டது பெரும்பாலோர்க்கு.
EMI என்றால் என்ன, எப்படி கணக்கிடப்படுகிறது?
நீங்கள் செலுத்தும் தவணைப் பணம் (Installment) எப்படி கடனை அடைக்கிறது.
வட்டி விகிதம் (Interest rate) மாற்றத்தினால் என்ன விளைவு?
Part Payment செய்வதால் என்ன பலன்?
உதாரணங்களோடு பார்ப்போம், using MS Excel.
01. EMI என்றால் என்ன – நீங்கள் வாங்கிய கடனுக்கு கட்டும் மாதாந்திர தவணை பணம் ஒரே அளவாக இருக்கும் படி கணக்கிடப்படுகிறது.
Ex: ஒருவர் Rs 1,00,000 பணத்தை 18 மாதங்களுக்கு 15% per annum வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.
அதற்கு EMI amount is Rs 6,238, ie மாதா மாதம் செலுத்த வேண்டிய தொகை.
மொத்தம் திருப்பி செலுத்தவேண்டியத் தொகை Rs 1,12,293, so வட்டியாக Rs 12,293. படத்தை பார்க்கவும்.
02. EMI – Principal & Interest:
கடன் வாங்கினால், அசல் (Principal) மற்றும் வட்டி (Interest) இரண்டையும் கட்ட வேண்டும். EMI தொகையில் இரண்டு componentகளும் உள்ளது. தற்போதுள்ள கடன் நிலுவைத் தொகைக்கு (Present Outstanding loan amount) வட்டியை கணக்கிடவும் (Interest Amount).
வட்டிக்கு போக மிச்சமுள்ள தொகை நிலுவைத் தொகையை குறைக்கும் (Towards Principal). அப்படி குறைந்த தொகையே அடுத்த மாதத்தின் Outstanding loan amount.
ஆரம்ப காலங்களில் வட்டிக்கு செல்லும் தொகை அதிகமாகவும், அசலுக்கு செல்லும் தொகை குறைவாகவும் இருக்கும். போக போக வட்டிக்கு குறைவாகவும் அசலுக்கு அதிகமாகவும் மாறும். காரணம் தவணை பணம் கட்ட கட்ட கடன் நிலுவைத் தொகை (Outstanding loan amount) குறைந்து கொண்டே வரும்.
03. EMI – Increase in Rate of Interest (வட்டி விகிதம் அதிகமானால்):
பெரும்பாலான கடன்ங்கள் தற்போது Floating Rate Interestஆக கொடுக்கப்படுகிறது, குறிப்பாக for Long Term Loans.
கடன் காலத்தின் இடையே வட்டி விகிதம் அதிகமானால் நாம் கட்ட வேண்டிய பணமும் காலமும் அதிகரிக்கும். ☹️☹️
வட்டி விகிதத்தின் மேல் எப்போதும் ஒரு கண் வைத்திருக்கவும் 🧐🧐. வட்டி விகிதம் அதிகமானால் EMI Amount Increase செய்வது பற்றி பின்பு பார்ப்போம்.
04. EMI – Decrease in Rate of Interest (வட்டி விகிதம் குறைந்தால்):
வட்டி விகிதம் குறைந்தால் மகிழ்ச்சி தான்.கடன் காலத்தின் இடையே வட்டி விகிதம் குறைந்தால் நாம் கட்ட வேண்டிய பணமும் காலமும் குறையும்.
Note:Regularly check with your bank to know if there is a decrease in Interest Rate
05. Part Payment:
EMI Amount போக உங்களிடம் எப்போதெல்லாம் அதிக பணம் சேர்ந்தாலும் (Office bonus, incentive, gain in business, etc), உங்கள் கடனின் ஓரு பகுதியை திருப்பி செலுத்த அதைப் பயன்படுத்தலாம். அப்படி செலுத்துவது தான் Part Payment.
இந்த Amount கடன் நிலுவைத் தொகையை நேரடியாக குறைக்கும், so தவணைக்காலமும் குறையும்.
நம் உதாரணத்தில் இரண்டு Part Payment செய்தால் தவணைக்காலம் குறைவதை படத்தில் பார்க்கலாம்.
எத்தனை முறை வேண்டுமானாலும், எவ்வளவு தொகையும் கட்ட allow செய்யும்படி Part Payment rules இருப்பது நமக்கு நல்லது.
06. EMI Amount Change:
வட்டி விகிதம் அதிகமாகும் சமயங்களில் உங்கள் வங்கி EMI Amountஐ உயர்த்த சொல்லலாம். அல்லது நீங்களே கூட EMI Amountஐ உயர்த்தலாம் (salary increase, other income). இதனால் உங்கள் தவணைக்காலம் குறைய வாய்ப்புண்டு. படத்தை பார்க்கவும்.
07. EMI Calculation – Day basis:
EMI Amount மாதாமாதம் கட்டுவோம். Interest calculation மாதாமாதம் நடக்கும். சுலபமாக புரிந்து கொள்வதற்க்காக நம் உதாரணங்களில் வருடத்திர்ற்கு 12 மாதம் என்ற அடிப்படையில் Interest calculation செய்துருக்கேன், ie Rate of Interest per annum divided by 12
பொதுவாக வங்கிகளில் number of days divided by 365 என்று Interest calculation செய்வார்கள்.
Ex: Days between 05-Mar-202 to 05-Apr-2022 is 31 days. Interest Amount = Rate of Interest 15% * 31 / 365.
படத்தை பார்க்கவும்.
08. Upfront payment of EMIs:
சில நேரங்களில் லோன் போட்டு பொருட்கள் வாங்கும்போது, 2 or 3 மாத EMI Amountஐ எடுத்த உடனேயே (upfront) கட்ட சொல்வார்கள். இது குறைந்த அளவு கடன் கொடுத்து நம்மிடம் அதிக வட்டி வாங்குவதற்க்கு செய்யும் ஏமாற்று வேலை 🙄🙄. இதை வகை லோன்களை நாம் தவிர்க்க வேண்டும்.
நம் உதாரணத்தில், 2 EMI Amount எடுத்த உடனேயே கட்டச்சொன்னால் உன்மையான கடன் தொகை Rs 87523 (instead of 1 lakh) and வட்டி விகிதம் 19.07% (instead of 15%). எவ்வளவு அதிகமாகுது பாருங்கள். 😧😧
The excel workbook is available at https://t.co/gFj7tMvf0F
Use for reference purpose only. சுலப புரிதலுக்காக simple உதாரணங்களை மேற்கோள் காட்டியிருக்கிறேன். The calculations will change based on dates of loan distribution, EMI Date, Interest Rate changes, Part Payment dates, etc.
Suggestions / Recommendations:
Long Term Loans (Ex: Home Loan) – நாட்டுடமை ஆக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்குவது நல்லது. Ex: SBI, Bank of Baroda, etc and LIC Housing Finance. Check the Part Payment rules & charges, Pre-closure rules & charges, Processing charges.
Mid Term Loans (Ex: Vehicle Loan) – வங்கிகளில் கடன் வாங்குவது நல்லது. Ex: SBI, ICICI, etc. குறிப்பாக Rate of Interest & Processing charges check செய்யவம், also the Part Payment rules & charges, Pre-closure rules & charges.
Short Term Loans (Ex: Personal Loan) – வங்கிகளில் & registered Financial Institutions எங்கு Rate of Interest & Processing charges குறைவாக உள்ளது என்று பார்த்து முடிவெடுங்கள். Unknown/Unregistered/Unrated companies, Online Apps இவர்களை முற்றிலுமாக தவிர்க்கவும்.
Loan statements regularஆக check செய்யவும். அவசியமில்லாத & ஆடம்பர பொருட்களை லோன் போட்டு வாங்குவதை தவிர்க்கவும். தேவையானவற்றை மட்டும் உங்கள் வருமானம், வழக்கமான & எதிர்பாரா செலவுகள் ஆகியவற்றை மனதில் கொண்டு திட்டமிட்டு முடிவேடுங்கள்.
Happy EMI life.
நன்றிகள். 🙏🙏
Post Source : https://twitter.com/S_Arun456/status/1530133365978206208?t=QW2gQ4Sji24b2JE1W7KApA&s=19
@skpkaruna
@akaasi
@kalvetu
@DrVaathi
@bharath_kiddo
@HilaalAlamTamil
@rajbhagatt
@paramporul